திருச்சியில் நகரத்தார் சங்கத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழா!

திருச்சியில் நகரத்தார் சங்கத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழா

திருச்சியில் வசிக்கும் நகரத்தார் இணைந்து திருச்சிராப்பள்ளி நகரத்தார் சங்கத்தை 1949 ஆம் ஆண்டு துவக்கி பல தலைவர்களால் தொடர் அறம் வளர்த்து இன்று 75 – ம் ஆண்டு பவள விழா காண்கிறது.
இந்த 75வது பவள விழா ஆண்டின் பொறுப்பாளர்களாக சுப. சுப்பிரமணியன் தலைவராகவும் துணை தலைவர்களாக பெரி. முத்துக்குமார், சோம. இராமநாதனும், செயலாளராக சி.தியாகராஜனும் இணை செயலாளராக சுப. இராமசாமியும், பொருளாளராக சிவ .சாத்தப்பன் ஆகியோர் 2023-2025 ஆண்டு வரை செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றனர் இத

ன் ஒரு பகுதியாக இரண்டு நாள் விழாவாக 75 ம் ஆண்டு பவள விழா திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ் மஹாலில் சிறப்பாக நடைபெறுகிறது.
திருச்சி நகரத்தார் கல்வி பணி, கூட்டுத் திருமணம், தை பூசம், ஆண்டுதோறும் பழனியில் அபிஷேகம் என பல பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் மகளீர் சிறப்புற பணியாற்றும் மகளீர் சங்கமும் திருச்சியில் செயல்படுகிறது

திருச்சியின் விரிவாக்க பகுதிகளிலும் நகரத்தார் சங்கம் செயல்பட்டு வருகிறது. பவள விழா காணும் இச்சங்கம் பல நூற்றாண்டு விழாக்களை காண வேண்டும் என்பது தான் திருச்சி வாழ் நகரத்தார்கள் எண்ணம் என்பது குறிப்பிடதக்கது.