மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: உள்துறை அமைச்சகம் வழங்கியது!

புது­டெல்லி: மழை,வெள்­ளம், நிலச்­ச­ரிவில் ாதிக்­ கப்­பட்ட 14 மாநிலங்க­ளுக்கு நிவாரணநிதி­யாக ரூ.6,000 கோடியை மத்திய உள்­துறை அமைச்­ச­கம் விடுவித்துள்­ளது. தென் மேற்கு பருவமழை காரணமாக பல்­வேறு மாநிலங்­க­ளில் வெள்­ளப்­ பெ­ருக்கு, நிலச்­ச­ரிவு போன்­றவை ஏற்­பட்­டன. இதில் உள் ­கட்­ட­மைப்­ பு­கள் சேத­ம­டைந்­தன. மேலும் பலர் உயிரிழந்­தனர். இந்நிலையில், பாதிக்­கப்­பட்ட மாநிலங்­க­ளுக்கு மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் ரூ.6,000 கோடியை நிவாரண நிதியாக நேற்று வழங்­கியது. ்­படி, மாநில பேரி­டர் நிவாரண நிதியில் (எஸ்­டிர்­ எப்) மத்திய அரசின் பங்­கா­க­வும், தேசிய பேரி­டர் நிவாரண நிதியில் இருந்து முன்­ ப­ணமா­க­வும் இந்­தத் தொகை 14 மாநிலங்­க­ளுக்கு வழங்­கப்­பட உள்­ளது. அவற்றில் மகாராஷ்டிரா ரூ.1,492 கோடி, ஆந்திரா ரூ.1,036 கோடி, அசாம் ரூ.716 கோடி, பிஹார் ரூ.656 கோடி கோடி, குஜராத் ரூ.600 கோடி , இமாசல் ரூ.189 கோடி, கேரளா ரூ.146 கோடி, மணிப்­பூர் ரூ.50 கோடி, மிசோ­ரம் ரூ.21 கோடி, நாகா­ லாந்து ரூ.19 கோடி, சிக்கிம் ரூ.23 கோடி, தெலங்­கானா ரூ.417 கோடி, திரிபுரா ரூ.25 கோடி மற்றும் மேற்கு ங்­கத்துக்கு ரூ.468 கோடியை மத்திய உள்­துறை அமைச்­ச­கம் விடுவித்துள்­ளது. இதுகுறித்து மத்திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா நேற்று எக்ஸ் வலை­த­ளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இயற்கை பேரி­டர்­க­ளால் பாதிக்­கப்­பட்ட மாநிலங்­க­ளில் மக்­க­ளின் துயரத்தை போக்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. பாதிக்­கப்­பட்ட மாநி­லங்க­ளு­டன் தோளோடு தோளாக இருந்து மத்திய அரசு செயல்படும்” என்று உறுதி அளித்துள்­ளார். மேற்கூறிய மாநி­லங்க­ளுக்கு மத்திய ஆய்வு குழுவி­னர் ஏற்கனவே சென்று வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வை விட்டு உள்ளனர். அந்தக் குழுவினர் அழிக்கும் அறிக்கைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.