காந்தி ஜெயந்தியை முன்னிட்டு லயன்ஸ் கிளப் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

காந்தி ஜெயந்தி
அகிம்சையை வலியுறுத்தி பல்வேறு சிவில் கிளர்ச்சிகள் மூலம் இந்தியர்களை சுதந்திரப் பாதையில் அழைத்துச் சென்றவர் மகாத்மா காந்தி. வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்தியாகிரகப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், மற்றும் கீழ்ப்படியாமை இயக்கம் ஆகியவை நமது சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தூண்களாக நமது தேசத்தின் வரலாற்றில் உருவாக்கப்பட்டவை. மகாத்மா காந்தி இந்த வெகுஜன இயக்கங்களை கடுமையான அகிம்சை நடைமுறையுடன் வழிநடத்தினார். அவரை கொண்டாடும் வகையில் சேரன்மகாதேவி காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு சேரன்மகாதேவி லயன்ஸ் கிளப் சார்பில் தலைவர் முத்துராஜன், செயலாளர் பெருமாள், பொருலாளர் டென்னிஸ், பட்டயத் தலைவர் தேவராஜன் மற்றும் உறுப்பினர்கள் அலெக்ஸ், பணி மையம் ஆகியோர் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.