சென்னை, செப். 30விஜய் கட்சிக் கொடியில் யானைச் சின்னம்இருப்பது தொடர்பாகபகுஜன் சமாஜ் கட்சி
தொடர்ந்த புகாரில் தேர்தல் ஆணையம் பதிலளித்து உள்ளது. அதன்படி கட்சிக் கொடியில்
இருக்கும் சின்னங்கள்தொடர்பாக தலையிடமாட்டோம் என்றும் அதே நேரத்தில் தேர்தலின் போதுயானைச்
சின்னத்தை விஜய் கட்சிபயன்படுத்த முடியாதுஎன்றும் தெரிவித்துள்ளது.நடிகர் விஜய் தமிழக
வெற்றிக் கழகம் என்றபெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். அந்தக்கட்சிக்கு கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் கீழும் சிவப்பு வண்ணம் உள்ளது. நடுவில் மஞ்சள் வண்ணம். அதன் மையப்பகுதியில் வாகை மலரும் அதன் இரு புறத்திலும் யானை உரு வமும் பொறிக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய் தனது கட்சியின் மாநாட்டை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த
மாநாடு விக்கிரவாண்டிஅருகே வி.சாலையில் அக்டோபர் 27–ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே அவரதுகட்சிக்கொடி
யில் யானைசின்னம் இருப்பதற்கு
பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில்அந்தக் கட்சியின் சின்னம் யானை ஆகும். ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.அந்த புகாருக்கு இப்போது தேர்தல் ஆணையம் பதில்
தெரிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:–அரசியல் கட்சிகளின்
கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதியோ,அங்கீகாரம் வழங்காது.
ஆகவே தேர்தல் ஆணையத்
திற்கும் தமிழக வெற்றிக்கழக கொ டியின் சின்னத்திற்கும் எந்ததொடர்
பும் இல்லை. இதில் தேர்தல் ஆணையம் தலையிடாது.
அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில் யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்த முடியாது.இவ்வாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கட்சிக் கொடியில் தலையிட முடியாது: விஜய் கட்சிக்கு, யானை சின்னம் வழங்கப்படாது! பகுஜன் கட்சி புகாரில் தேர்தல் ஆணையம் பதில்!!






