சேரன்மாதேவி பேரூராட்சியில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் புதிய உறைக்கிணறுகள் அடிக்கல் நாட்டு விழா

சேரன்மாதேவி பேரூராட்சியில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் புதிய உறைக்கிணறுகள் அடிக்கல் நாட்டு விழா

சேரன்மாதேவி பேரூராட்சியில் தென்பகுதி மக்களின் தினசரி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் 4 புதிய உறை கிணறுகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், பேரூராட்சி மன்ற தலைவர் தேவி ஐயப்பன், வக்கீல் சரவண மணிமாறன், துணைத் தலைவர் பால் மாரி, முன்னாள் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஐயப்பன், கவுன்சிலர் அன்வர் உசேன், விசிக ஒன்றிய செயலாளர் மாதவன், செயல் அலுவலர் காதர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.