நிபா வைரஸ் எதிரொலி: குமரியில் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் சோதனை

நாகர்­கோ­வில்: கேரளா­வில் நிபா வைரஸ் பாதிப்பு­கள் அதிகரித்து வருவ­தைத் தொடர்ந்து கன்­னியா­குமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்­சல் பரி­சோ­தனை மேற்­ கொள்­ளப்­ப­டுகிறது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்­கம் அதிகரித்து வரும் நிலை­யில் அங்கி­ருந்து தமிழகத்தின் அண்டை மாவட்­ட­மான குமரிக்கு வரு­வோரை களி­யக்­காவிளை சோத­னைச் சாவடியில் சுகா­தா­ரத்துறை பரி­சோ­தனை செய்து வருகின்­றயினர்  இந்நி­லையில், கேரளாவில் இருந்துனர்.சுற்றுலா தமான கன்­னியா­குமரிக்கு வரும் கேரள சுற்றுலாப் பயணி­கள் மூலம் நிபா வைரஸ் பரவா­மல் தடுக்­கும் வகை­யில் முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வருகிறது. குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்­த­ரவின்­ பே­ரில் மாவட்ட சுகா­தா­ரப் பணிகள் துணை இயக்­குநர் மீனாட்சி மேற்­பார்­வை­யில் கன்­னியா­குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நிபா வைரஸ் பரவலை தடுக்­கும் பொருட்டு காய்ச்­சல் பரிசோ­தனை பட்டு வருகிறது. கன்னியாகுமரி நகரப் பகுதியின் நுழைவு வாயிலான விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது கேரளா பதி வெண் கொண்ட கார் மற்றும் பிற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடமும், காய்ச்சல் கண்டுபிடிக்கும் தெர்மாமீட்டர் கருவி மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள் தினமும் இரண்டு ஷிப்ட்டகளாக சுகாதாரப் பணியாளர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் ஹோட்டல் தங்கும் விடுதிகளிலும் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் வெளியூர் மற்றும் கேரளா சுற்றுலா பயணிகள் குறித்து தெரிவிக்கவும் சுகாதாரத் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 800 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது அதன்படி இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளப்படும் எனவும் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.