நெல்லை மாவட்டம் கோவிந்த பேரி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. இந்நிகழ்வில் ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் மாணவர்கள் ரத்த தானம் கொடுத்தார்கள்.
இந்த நிகழ்வில் ஏ ஆர் டி எஸ் பி சுப்பிரமணியன், சேரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் .k.சாந்தி, அம்பை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் வெங்கடாசலபதி, மருத்துவர் தனுசிகா, கல்லூரி முதல்வர் டாக்டர் வினோத் வின்செண்ட் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் தெய்வநாயகம் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் ஊர் காவல் படை வீரர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 36 நபர்கள் தன்னார்வதுடன் ரத்தம் வழங்கினர். . அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை ரத்தவங்கி குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் வெங்கடாசலபதி சான்றிதழ் வழங்கினார்.
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படை இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர்!






