மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டருக்கு மூன்று ஆண்டுகளாக வேலை வழங்காமல் அலை கழிக்கும் அதிகாரிகள்

 

ஸ்ரீமுஷ்ணம் அருகே
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டருக்கு மூன்று ஆண்டுகளாக வேலை வழங்காமல்
அலை கழிக்கும் அதிகாரிகள் நிலுவைத் தொகையும் வழங்காமல் காக்க வைத்திருக்கும் அரசின் மாவட்ட நிர்வாகம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சியில் முருகானந்தம் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக பணி செய்து வந்தார். இந்நிலையில் அரசின் மாவட்ட நிர்வாகமும், வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பணிகள் எதுவும் வழங்காமல் இவரிடமிருந்து சாவியை பிடுங்கிக் கொண்டு, உனக்கு வேலை வழங்க முடியாது என்று மறுத்து வருகிறார்கள். இது குறித்து பலரிடமும் புகார் அளித்தும் பலனில்லை எனும் முருகானந்தம், சர்க்கரை நோய் பாதிப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வலது காலின் கட்டை விரல் எடுக்கப்பட்டு மற்றும் வலது கை பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி வரிசையில் இருக்கிறார்.
இவருக்கு உடனடியாக மீண்டும் மேல்நிலைத் தேக்கத்தொட்டி ஆப்பரேட்டராக பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் மற்றும் நிறுத்தி இருக்கும் நிலுவைத் தொகையான சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றார். இது தொடர்பாக பலரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும், நடவடிக்கைக்கு உண்டான தீர்வும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டு வருகிறார்.