அரசு பஸ்களில் இனி பார்சல் அனுப்பலாம்! டிரைவர், கண்டெக்டருக்கு காசு கொடுக்க தேவையில்ல!

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் இனி பயணிகளுடன் சேர்த்து பார்சல்களையும் அனுப்புவதற்கான திட்டங்களை தற்போது போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது. இதை தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுத்த போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து திட்டமிடுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு ஊர்களையும் இணைக்கும் வகையில் தற்போது தமிழக அரசின் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பஸ்களில் ஏராளமான பயணிகள் தினந்தோறும் பயணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் போக்குவரத்துக் கழகங்களில் பெரும்பாலான கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் சூழ்நிலை இருக்கிறது. இதற்காக தற்போது முடிந்த அளவுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டுவதற்கான வழிகளை போக்குவரத்து கழகங்கள் யோசித்து வருகின்றன. அதன் ஒரு படியாக தமிழக போக்குவரத்து கழகங்களில் இயங்கும் பஸ்களில் இனி பார்சல்களை அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பலர் பஸ்களில் பார்சல்களை டிரைவர், கண்டக்டர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்து வருகிறார்கள். நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களில் இப்படியான பார்சல்களை வாங்கி டிரைவர் கண்டக்டர்கள் குறிப்பிட்ட ஊருக்கு சென்று அங்கு பார்சலை வாங்க ஒரு நபரை வரவழைத்து பார்சலை பெற்று செல்கிறார்கள். இது விதிமுறைகளை மீறி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இதை முறைப்படுத்துவதற்காக தமிழக போக்குவரத்து கழகங்கள் தற்போது தமிழக அரசு பஸ்களில் பயணிகளுடன் சேர்த்து பார்சலையும் முறையாக அனுப்புவதற்கான புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தனியார் நிறுவனங்கள் பார்சல்களை புக் செய்து அதை பஸ்களில் ஏற்றி விடுவார்கள். அந்த பஸ்கள் குறிப்பிட்ட ஊருக்கு சென்றவுடன் அங்கிருந்த தனியார் நிறுவனம் பார்சலை பிக்கப் செய்து அதை டெலிவரி செய்யும் பணியை பார்க்கும்.
இதற்காக தற்போது தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த தொழிலை முறைப்படுத்துவதற்கான பணிகளை செய்ய உள்ளது. இவர்கள் முடிவு செய்து இது எப்படி இயங்க வேண்டும் என்ற விதிமுறைகளை வகுப்பார்கள். இது மட்டுமல்லாமல் இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

இதற்காக அந்த குழு தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. விரைவில் இதை செயல்படுத்துவதற்கான பணிகளையும் தமிழக அரசு செய்ய உள்ளது. இது செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பெரிய பார்சல்களை குறைந்த விலையில் சுலபமாக அனுப்ப முடியும். அது மட்டுமில்லாமல் இந்த பார்சல் விரைவாகவும் சென்று சேரும்.

தற்போது பார்சல்களை கொரியர் மூலம் அனுப்பினால் அதிக காலம் எடுக்கிறது. இன்று அனுப்பினால் மறுநாள் தான் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேருகிறது. ஆனால் இந்த பஸ்கள் மூலம் அனுப்பும் போது நீங்கள் அனுப்பிய நாளிலேயே சென்று சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முக்கியமாக அடுத்தடுத்த ஊர்களுக்கு இப்படியான பார்சல் அனுப்புவதற்கு இது சுலபமான வழியாக இருக்கும்.

இதை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தற்போது துரிதப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு இறுதியா அல்லது 2025 ஆம் ஆண்டு கூல் இது அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இது அறிமுகமானால் விரைவாக பார்சல் அனுப்புவதற்கு மற்றொரு பெரிய வழியாக இருக்கும். இதன் மூலம் அரசுக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.

சரி இப்படி பார்சல்கள் எல்லாம் அனுப்பும் அளவிற்கு தமிழக அரசு பஸ்கள் தொழிற்நுட்ப ரீதியாக சிறப்பாக இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என துணிந்து சொல்லலாம். ஒரு காலத்தில் தமிழக அரசு பஸ்கள் குறைந்த திறன் இன்ஜின் உடன் இயங்கி வந்தது. ஆனால் தற்போது இயங்கும் பெரும்பாலான பஸ்களில் இன்ஜின் சிறப்பாக இருக்கிறது. இது மட்டுமல்லதற்போது உள்ள பஸ்களில் இடவசதிகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

பார்சல்கள் பஸ்களில் அனுப்பபடும் பட்சத்தில் பஸ்களில் அதற்கான தனி வசதிகள் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பஸ்சில் பயணிகள் சீட்டில் இல்லாமல் தனியார் ஆம்னி பஸ்களில் இருப்பது போல பஸ்க்கு அடியில் சரக்கு ஏற்ற இடம் வடிவமைக்கப்பட்டு அங்கு இந்த பார்சல்கள் எல்லாம் ஏற்றப்படும் என தெரிகிறது. இதற்காக தற்போது உள்ள பஸ்களில் சில மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இப்படியாக மாடிஃபிகேஷன் செய்தாலும் தற்போது உள்ள அமைப்புகளில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் வகையில் தான் இந்த மாடிஃபிகேஷன் செய்யப்படும். குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பஸ்களில் இந்த மாடிஃபிகேஷன் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

சமீபத்தில் தமிழக அரசு தாழ்தள பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. இந்த பஸ்களில் உள்ள இன்ஜின் மிக கவனிக்கத்தக்கது. இதில் H சிரீஸ், 6 சிலிண்டர், 4 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 246 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட பஸ்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:தற்போது அரசு பஸ்களில் இப்படியாக முறையில்லாமல் பார்சல் ஏற்றி செல்லும் நிலையில் இந்த வருமானம் அரசுக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இதை அரசுக்கு கிடைக்க வைப்பதற்காக இப்படியான முயற்சியில் தவறாக போக்குவரத்து கழகம் இறங்கியுள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். இதன் மூலம் நிச்சயம் பெரிய லாபம் அரசுக்கு கிடைக்கும்

தற்போது பார்சல்களை கொரியர் மூலம் அனுப்பினால் அதிக காலம் எடுக்கிறது. இன்று அனுப்பினால் மறுநாள் தான் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேருகிறது. ஆனால் இந்த பஸ்கள் மூலம் அனுப்பும் போது நீங்கள் அனுப்பிய நாளிலேயே சென்று சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முக்கியமாக அடுத்தடுத்த ஊர்களுக்கு இப்படியான பார்சல் அனுப்புவதற்கு இது சுலபமான வழியாக இருக்கும்.