தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ரூ.60கோடி மதிப்பிலான மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: செப்.23தஞ்­சா­வூர் மற்­றும் சேலம் ஆகிய மாவட்­டங்க­ளில் ரூ.60 கோடி செலவில் கட்­டப்­பட்­டுள்ள மினி டைடல் பூங்­காக்­களை முத­லமைச்­சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்­தார். முத­லமைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இன்று தலைமைச் செய­லகத்­தில், தொழில், முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்றும் வர்த்­தகத் துறைசார்­பில்,தமிழ்­நாட்­டி­லுள்ள சிறு நக­ரங்­க­ளுக்கு தக­வல் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யினை கொண்டு செல்­லும் நோக்­கத்­து­டன் தஞ்­சா­வூர் மாவட்­டம்,தஞ்சா­வூர் வட்­டம், பிள்­ளையார்­பட்டி கிரா­மத்­தில் 30.50 கோடி ரூபாய் செலவி­லும் மற்­றும் சேலம்மாவட்­டம், ஓம­லூர் வட்­டம், ஆனைக்­க­வுண்­டன் ­பட்டி மற்­றும் கருப்­பூர் கிரா­மத்­தில் 29.50 கோடி ரூபாய் செல­வி­லும் கட்­டப்­பட்­டுள்ள மினி டைடல் பூங்­காக்­களை திறந்து வைத்­தார். இந்­தி­யா­வி­லேயே இரண்­டாவது பெரிய பொரு­ளா­தார மாநி­லமாக விளங்கி வரும் தமிழ்­நாட்­டினை,2030ஆம் ஆண்­டிற்­குள் ஒருடிரில்­லி­யன் அமெ­ரிக்கடாலர் பொரு­ளா­தார இலக்கை முத­லமைச்­சர் மு.க.ஸ்டாலின் தலைமையி­லான அரசு நிர்­ண­யித்து,அதற்­கான பல்­வேறு முன்­னெ­டுப்­பு­களை மேற்கொண்டு வரு­கி­றது.அதன் ஒரு பகு­தி­யாக,தமிழ்­நாட்­டின் இளை­ஞர்­க­ளுக்கு அதிக எண்­ணிக்­கை­யி­லான வேலைவாய்ப்­பு­க­ளை உரு­வாக்­கி­டும் நோக்­கத்­து­ட­னும், மாநி­லத்­தில் தொழில்வளர்ச்­சியை மேம்­ப­டுத்­துவ­தற்­காகவும் முத­லமைச்­சர் அண்­மை­யில் அமெ­ரிக்க நாட்­டிற்கு அரசுமுறைப்பய­ணம் மேற்கொண்டு 19நிறு­வ­னங்­க­ளு­டன் 7616கோடி ரூபாய் முத­லீட்­டில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்கள் மேற்கொள்­ளப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.எதிர்­காலத்­தில் தக­வல் தொழில்­ நுட்­பத்துறையில் ஏற்­படக்­கூ­டிய அதீதவளர்ச்­சியை கருத்­திற்கொண்டு 2000ஆம்ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர்கலை­ஞர் அவர்­கள் தொலை நோக்கு பார்­வையு­டன் சென்னை தர­ம­ணி­யில் டைடல் பூங்­காவை நிறுவி, திறந்து வைத்­தார்.இது நம் மாநி­லம் முழு­வ­தும் தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யில் மாபெ­ரும் வளர்ச்சி ஏற்­படவித்­திட்­டது.