அறந்தாங்கி, செப். 23 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் பார்ப்பதாக அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவலர்களுக்கு ரகசிய தகவல்கிடைத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவலர்கள் வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் பார்த்த முத்து என்பவரை அறந்தாங்கி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 10கிராம் எடை கொண்ட 40கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 16 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றி அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
அறந்தாங்கியில் கஞ்சா வியாபாரி கைது 40 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல






