தி.மு.க. உறவை துண்டிக்குமாறு காங்கிரசில் `திடீர்’ போர்க்கொடி: மூத்த தலைவர்கள் அதிர்ச்ச

சென்னை, செப். 22 தமிழ்­நாட்டில் தி.மு.க. காங்கி­ரஸ் கூட்­டணியில் இருந்­தா­லும் மேல் மட்­டத்­தில் தலை­வர்­க­ளி­டையே ஒருங்கி­ணைப்பு இருந்­தாலும் கீழ் மட்­டத்­தில் அந்த அளவு ஒருங்கி­ணைப்பு இல்லை என்­பது தேர்­தல் கால கட்­டங்­க­ளில் வெளிப்­ப­டும்.அந்தவகை­யில் இப்­போது அடுத்து வரப்­போ­கும் உள்­ளாட்சிதேர்­தல் மற்றும் கட்சியின் எதிர்­கால திட்­டங்­கள் தொடர்­பாக விவாதிப்­பதற்­காக தமிழக காங்கி­ரஸ் செயற்குழு மற்றும் மாநில நிர்­வாகிகள், மாவட்ட தலை­வர்­கள் ஆலோ­சனை கூட்­டம் சத்­திய­மூர்த்தி பவ­னில் நடத்­தப்­பட்­டது.காலையில் செயற்குழு கூட்­டம் நடந்து முடிந்­தது. மாலையில் மாவட்ட தலை­வர்­கள் கூட்­டம் நடந்­தது. கூட்­டத்­துக்கு மாநிலதலை­வர் செல்­வப்­பெ­ருந்­தகை தலைமை தாங்கி­னார்.காங்கிரஸ் நிலை மற்றும் மக்­கள்மன­நிலை பற்றி பேசும்­படிமாவட்ட தலை­வர்­க­ளி­டம் கேட்­டுக் கொள்­ளப்­பட்­டது.அப்­போது பல மாவட்ட தலை­வர்­கள் தங்­கள் பகுதியில் தி.மு.க.காங்கிரஸ் இடையே உறவு சரி­யில்லை. காங்கிர­சாரை மதிப்­பது கூட இல்லை என்று அதிருப்தி தெரிவித்­தார்­கள்.கட்சி கீழ் மட்­டத்­தில் இருந்து வளர உள்­ளாட்சி பிரதிநிதிகள் அவசியம். உள்­ளாட்சி தேர்­த­லில் கூடு­த­லான இடங்­களை தலை­வர்­கள் கேட்டுப் பெறவேண்­டும். இல்­லாவிட்­டால் தகுதி, செல்­வாக்­குக்கு ஏற்ப போட்டியிட அனு­ம­திக்க வேண்­டும் என்­றார்­கள். நெல்லைமாவட்ட தலை­வர் சங்­கர­பாண்­டியன் பேசும் போது கடந்த பாராளு­மன்ற தேர்­த­லில் ஏற்­க­னவே காங்கிரஸ் 4½ லட்­சம் ஓட்டுகள் வித்­தியா­சத்­தில் வெற்றி­ பெற்ற திருச்சி தொகுதியை விட்­டுக்­கொ­டுத்­தது தவறு. இத­னால் தி.மு.க.வுக்கு அனு­ச­ர­ணையாக போவது போல் கட்சியி­னர் பேசுகி­றார்­கள்.இதேபோல் தி.மு.க.வுக்குஅதிக செல்­வாக்கு இருக்­கும் தொகுதியை நமக்கு விட்டுதரு­வார்­களா?ராகுல் நெல்­லைக்கு பிர­சா­ரத்­துக்கு வந்­த­போது மேடையில் காம­ராஜர் படம், காங்கி­ரஸ் கொடி கூட இடம் பெறாதநிலை இருந்­தது. காங்கிரஸ்காரர்­களை மேடை பக்­கம் கூட அனு­ம­திக்­க­வில்லை.அதன்­பி­றகு மாநில தலை­வ­ரின் கவ­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­பட்டு கொடிகள் கட்­டப்­பட்­டன.கடந்த தேர்­த­லில் தி.மு.க. வென்றது வெறும் 2 சதவீத வாக்கு வித்தியா­சத்­தில்­ தான். அதற்கு காரணம் ராகுலின் நடை­ப­யணத்­தால் உரு­வான எழுச்சிதான் என்­றார்.சில மாவட்ட தலை­வர்­கள் தங்­கள் மாவட்­டங்­க­ளில் திமு.க.வினரின் அனு­மதி இல்­லாமல் எந்த வேலையும் செய்யமுடி­வ­தில்லை. காங்கிர­சார் முன்­னெ­டுக்­கும் பணிகளுக்­கும் முட்டுக்கட்டைபோடுகி­றார்­கள். இதே நிலைதொடர்ந்­தால் காங்கி­ரஸ் எப்­படி வள­ரும் என்று ஆவே­ச­மாக பேசி­னார்­கள்.கவுரவ பதவிகளை கூட காங்கிரசுக்கு தரமறுக்­கி­றார்­கள். சம்­பாதிப்­பதற்கு பதவி கேட்­க வில்லை. எங்­கள் பகுதி­யில் நீண்ட காலம் கட்சியில் இருக்­கி­றோம். கோவில்­க­ளில் நியமிக்­கப்­படும் கவுரவ பதவியான அறங்­கா­வலர்­கள் பதவியை கூடவழங்கு­வ­தில்லை என்று ஆதங்­கத்தை  வெளிப்­படுத்­தி­னார்­கள்.       கூட்­டணி மேல் மட்­டத்­தில் திருப்தியாக இருந்­தா­லும் கீழ் மட்­டத்­தில் திருப்தியாக இல்லை என்பதை தங்­கள் பேச்சில் வெளிப்­ப­டுத்­தி­னார்­கள்.மாவட்ட தலை­வர்­க­ளின் பேச்­சுக்­களை மாநில தலை­வர்­க­ளும்,மேலிட பொறுப்­பா­ளர்­க­ளும் அமை­தியாக கேட்டுக் கொண்­டி­ருந்­தார்­கள். கீழ்மட்­டத்­தில் தொடரும் அதிருப்தியை பார்த்து அவர்­கள் அதிர்ச்சி அடைந்­தார்­கள்.பின்­னர் மாநில தலை­வர் செல்­வப்­பெ­ருந்­தகை பேசும் போது,”உங்­கள் பிரச்சினைகளை நான் அறி­வேன். இந்த மாதிரி பிரச்சி­னை­களுக்கு கட்சி தலைமை கார­ணம் அல்ல. மாவட்ட  அள­வில் செய்யும் தவ­றுகள்­ தான்.எனது தொகுதியான ஸ்ரீபெரும்­புதூரில் கூட உள்ளாட்சி தேர்­தலில் காங்கிரஸ் வேட்­பா­ளர்­கள் தோற்­க­டிக்கப்­பட்ட சம்­ப­வம் நடந்­தது.இந்த மாதிரி நடக்­கும் பிரச்சி­னை­கள் பற்றி முதல்அ­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கவ­னத்­துக்கு எடுத்து செல்­லப்­பட்டு நல்ல சூழ்நிலை ஏற்­படுத்­தப்­படும் என்­றார்.மாவட்ட அள­வில் பேசும் போது, தி.மு.க. மாவட்ட செய­லா­ளர்­க­ளு­டன் பேரம் பேசி சீட் வாங்க முடி­வ­தில்லை. குறிப்பிட்ட சதவீ­தத்தை பெற்றுத்தர வேண்­டும் என்றுபல­ரும் வலியுறுத்­தி­னார்­கள்.