வீரவநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலரை 18 வது வார்டு கோபாலகிருஷ்ணய்யர் தெருவில் இருக்கும் பெண்கள் முற்றுகை.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு கோபாலகிருஷ்ணய்யர் தெருவில் சுமார் 20 வீடுகளுக்கு கடந்த ஒரு வருட காலமாக குடிதண்ணீர் பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னால் செயல் அலுவலரிடமும் வார்டு உறுப்பினர் சின்னதுரை இடமும் மனு அளித்து கோரிக்கைகள் சொல்லியும் எந்

தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை சமீபத்தில் இணையதளம் மூலமாக 13.09.2024 அன்று மனு அளிக்கப்பட்டது. குடிதண்ணீருக்கு மிகவும் சிரமமாக உள்ளதால் இன்று
20.09. 2024 வீரவநல்லூர் செயல் அலுவலரை நேரில் சென்று தண்ணீர் பிரச்சனையை கூறினார்கள். அதற்கு செயல் அலுவலர் நான் புதிதாக வந்திருப்பதால் எனக்கு எந்த விதமான விஷயமும் தெரியவில்லை என்று சரிவர பதில் தரவில்லை எனவே எங்களுக்கு தண்ணீர் பிரச்சனைக்கு அடுத்த கட்டமாக சப் கலெக்டர் அலுவலகம் சென்று
முறையிட உள்ளோம் என்பதை கோபாலகிருஷ்ணய்ய தெரு பெண்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி, ராஜராஜேஸ்வரி, மற்றும் துரைராஜ், குப்புசாமி மற்றும் பலர் தெரிவித்துக் கொண்டனர்






