ஆற்காடு,செப்,20-தலை இல்லாத உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய உடலை மருத்துவர்கள் மறுத்ததால் போலீஸார் தலையைத் தேடி வருகின்றனர்
இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த விளாரியில் வாலிபரின் சடலம் மிதந்து இருப்பதாக திமிரி
போலீசாருக்கு தகவல் கிடைத்தது
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி,மற்றும் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு
சென்று அழுகிய நிலையில் மிதந்த உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அது தொடர்பாக விசாரணையில் அதே கிராமத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ள வெங்கடேசன் (28) என தெரிய வந்தது. இதற்கிடையே மருத்துவமனையில்
பிரேத பரிசோதனைக்கு உடலில் தலையில்லாதது கண்ட மருத்துவர்கள் உடனே போலீசாருக்கு தலையை கண்டு பிடித்து கொண்டு வந்தால் தான் பரிசோதனை செய்ய முடியுமென மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து போலீசார் வேறு வழியின்றி சம்பவ இடத்திற்கு சென்று கிணற்று நீரை வெளியேற்றி தலையை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தலையைத் தேடிடும் இச்சம்பவம்
அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலை இல்லாத உடலுக்கு பிரேத பரிசோதனையா? மருத்துவர்கள் மறுப்பு; தலையை தேடிவரும் போலீசார்!






