‘‘சமத்துவ உலகை நிறுவுவதே நமது தலையாய பணி’’: பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

சென்னை: உலகம் முழுவதும் தமிழர்­கள் உயர்ந்த நிலை­களில் இருப்­ப­தற்கு, தந்தை பெரியா­ரின்
சிந்­த­னை­யும் உழைப்­புமே அடித்­த­ளம் என தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் தெரி­வித்துள்­ளார்.
பெரியா­ரின் 146வது பிறந்­தநாளைமுன்னிட்டு சென்னை அண்ணாசாலை­யில் அமைந்­துள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்­கப்­பட்டிருந்த அவரது உரு­வப்­ப­டத்திற்கு தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்­தினார். அவரு­டன் அமைச்­சர்­கள் துரை­மு­ருகன்,
கே.என்.நேரு, பொன்­முடி,எ.வ.வேலு,உத­யநிதி ஸ்டாலின்,அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி, டி.ஆர்.பாலுஎம்.பி., கனி­மொழி எம்.பி. உள்­ளிட்­டோர் உடன் இருந்­த­னர்.இந்நி­லை­யில், இது குறித்து முதல்­வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்­கத்தில், “புரட்டுக்கதை­களுக்கும் – வறட்டு வாதங்க­ளுக்கும் வளைந்து கொடுக்­கா­தீர்­கள். எல்­லா­வற்றுக்­கும் மேலா­னது சுயமரி­யாதை என இனமான உணர்வூட்டி நிமிர்­நடைபோட வைத்த பகுத்­த­றி­வுப் பகலவனுக்குப் புரட்சிவணக்­கம்!
இன்று உலகம் முழு­வதும் தமிழர் உயர்ந்த நிலை­களில் இருப்­ப­தற்கு, தந்தைபெரியா­ரின் சிந்­த­னை­யும் உழைப்­புமே அடித்­த­ளம். ஆயிர­மாண்டு மட­மை­யை  பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்­கான வெளிச்­சம்.அந்தவெளிச்­சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலை­யாய பணி” எனப் பதி­விட்டுள்­ளார்.

அதிமுக பொதுச்­செ­ய­லா­ளர் இபிஎஸ் தனது ‘எக்ஸ்தளத்தில், “சாதிய­வா­தத்தை, மத­வா­தத்தை கூரிய கருத்துக்­க­ளால் நொறுக்கிய கேள்­வித்தடி தந்தை பெரியா­ரின்தடி. சமத்துவம், சமூக­நீதி, பெண் விடு­தலை ஆகிய உயரிய கோட்­ பாட்டுவேள்­விகளை நம்மில் விதைத்த அவர்­ தம் பிறந்­த­நா­ளில், அடிப்­ப­டை­வா­தத்திற்கு துளி­யும் இட­மின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவு­டை­மைச் சமூகத்தை கட்­ட­மைக்க உறுதியேற்­போம். தந்தை பெரியா­ரின் புகழ் ஓங்­குக” எனப் பதிவிட்டுள்­ளார்.

பெரியாரின் பிறந்­த­நா­ளை­யொட்டி தைலா­புரம் தொட்­டத்­தில் பாட்­டாளி மக்­கள்கட்சியின் அரசியல் பயி­லரங்­கத்தில் அமைக்­கப்­பட்டுள்ள அவரது உரு­வச்சிலைக்கு பாட்­டாளி மக்­கள் கட்சியின் நிறுவ­னர் ராம­தாஸ், பா.ம.க.தலை­வர் அன்­புமணி இரா­ம­தாஸ் ஆகி­யோர்
மாலை அணிவித்து மரி­யாதை செலுத்தினர்.