வீரவநல்லூரில்பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியை திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு தயாசங்கர் ஜி அவர்களின் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட துணைத் தலைவர் திரு ராம்ராஜ் பாண்டியன் அவர்களின் தலைமையில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு தங்கேஸ்வரன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின்படியும், சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியத்தை சார்ந்த வீரவநல்லூரில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17.9.2024 அன்று வீரவநல்லூர் பஸ் நிலையம் சமீபம் பிளக்ஸ் போர்டு வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாரதிய ஜனதா கட்சியின் கோஷங்களை எழுப்பியும் வெடி வெடித்தும் கொண்டாடப்பட்டது, இதில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட துணைத்தலைவர் திரு ராம்ராஜ் பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் மண்டல நிர்வாகிகள் இசக்கி முத்து, மாரியப்பன், என் மாரியப்பன் கே எம் டபிள்யூ, பி. ஆறுமுகம், ஆர். குமார்,இசக்கிமுத்து,அமுதன் டேவிட், தேவேந்திரன்,சங்கர், ஆனந்த்,பெயிண்டர்,ரேவதி ஐயப்பன், சிவா, கதிரவன், நடராஜன்,கணேசன், கண்ணன், மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களும் கலந்து கொண்டனர்.






