முதல் பரிசாக ரூ.15,010 வென்று அசத்தல் – வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு
திட்டக்குடி, செப்.1:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள கல்லூர் பகுதியில், கல்லூர் பாய்ஸ் கிரிக்கெட் குழு சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
இப்போட்டியில் கல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அணிகள் வெற்றி பெற்று அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறின.
போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் பரிசை கல்லூர் கிரிக்கெட் குழு கைப்பற்றி, ரூ.15,010 பரிசுத்தொகையை வென்றது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த டி.ஏந்தல் கிரிக்கெட் குழுவுக்கு ரூ.10,007 பரிசுத்தொகையும், மூன்றாம் இடம் பெற்ற ஆலம்பாடி கிரிக்கெட் குழுவுக்கு ரூ.7,018 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
நான்காம் இடத்தைப் பிடித்த ம.பொடையூர் கிரிக்கெட் குழுவுக்கு ரூ.5,045 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.ஜி. கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகைகளை வழங்கி வீரர்களை பாராட்டினார்.
மேலும், இளம் கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தவெகவைச் சேர்ந்த கல்லூர் பாலு, கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.






