கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கார்க் ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான டெக்னம் ரக விமானம் நேற்று காலை 11.30 மணிக்கு புறப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கு பின், காத்ரி பகுதியில் உள்ள நாதாபுர்வா கிராமத்திற்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குஜராத்தை சேர்ந்த பயிற்சியாளர் சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி ஆகியோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சச்சின் பாட்டியா சுமார் 3000மணி நேரம் விமானம் இயக்கி அனுபவம் கொண்டனர். விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பிரிவு விசாரிக்க உள்ளது.






