ஆத்தங்குடி இளையராஜாவின் மாபெரும் இன்னிசை பாடல்–நடன நிகழ்ச்சி கோலாகலம்
திருச்சி, ஆகஸ்ட் 14: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட E.B. ரோடு, கமலா நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காவல் தெய்வம் ஸ்ரீ வண்டி கருப்பு சாமி, ஸ்ரீ பூ மாரியம்மன், ஸ்ரீ கம்பீர விநாயகர், ஸ்ரீ வேம்படி சக்தி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் 78ஆம் ஆண்டு பெரிய பூஜை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்வாழ்த்துக்களுடனும், கழக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்களுடனும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் விழா ஏற்பாடுகள் நடைபெற்றன.
திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் குடமுருட்டி கரிகாலன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் M. விக்னேஷ் MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாபெரும் இன்னிசை பாடல்–நடன நிகழ்ச்சி
திருவிழாவை முன்னிட்டு, கழக நிர்வாகியும் வேதாத்திரி நகர் பகுதியைச் சேர்ந்த M. பாலு அவர்களின் ஏற்பாட்டில், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து நடத்திய கிராமியப் பாடகர், மேடைக்கலைஞர் மற்றும் திரைப்படப் பாடகர் ஆத்தங்குடி இளையராஜாவின் மாபெரும் இன்னிசை பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆத்தங்குடி இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் மற்றும் கிராமிய இசைப் பாடல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். திருவிழா முழுவதும் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கழக நிர்வாகிகள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பழக்கடை சரவணன், ஜெயராஜ், E.B. ரோடு சக்திவேல், ராக்போர்ட் ராஜேஷ், பழக்கடை சக்திவேல், ஏர்போர்ட் மோசஸ், வழக்கறிஞர் ஜெயகுமார், ஏர்போர்ட் சரவணன், ஏர்போர்ட் ஜெகன், பாலக்கரை ஜேம்ஸ், வழக்கறிஞர் அஸ்வின், ஏர்போர்ட் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், 17வது வார்டு வட்ட செயலாளர் M. வெங்கடேஷ், வேதாத்திரி நகர் வெங்கடேஷ், முருகா உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மகளிர் அணி நிர்வாகிகளான அன்னை தெரசா, லதா, ரூபா, M. ரேவதி, பிரின்சி, தீபா உள்ளிட்டோரும், பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கழகத் தோழர்கள், தோழிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.
78ஆம் ஆண்டு பெரிய பூஜை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாபெரும் இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சி, பக்தி மற்றும் கலைநிகழ்ச்சிகள் இணைந்த சிறப்பான விழாவாக அமைந்தது.






