தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில அளவில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார், இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊதியர் சங்க மாநில பொருளாளர் செந்தமிழ் செல்வன் தொடக்க உரை ஆற்றினார், இதனை அடுத்து தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்வி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் பஷீர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் கோடீஸ்வரன், முடிவில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு தலைவர் சண்முகம் இந்த ஆர்ப்பாட்டத்தில்நிறைவு உரையாற்றினார்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பெண்கள் உட்பட ஏராளமான ஓய்வு ஓய்வு பெற்றவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.