கண்ணீர் அஞ்சலிக்குப் பின் இறுதிச் சடங்கு நிறைவு – பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி

‎கண்ணீர் அஞ்சலிக்குப் பின் இறுதிச் சடங்கு நிறைவு – பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி

‎திருநெல்வேலி மாவட்டம், பாளையாங்கோட்டை, சமதானபுரம் தளவாய் அம்மன்அம்மன் கோவில்தெருவை சேர்ந்த தாழையுத்து சிமின்ட் பாக்டரியில் பணிபுரிந்த தெய்வத்திரு.வீரமணி மற்றும் அரசு ஆசிரியை தெய்வத்திரு. கமலாதேவி அவர்களின் மகன் வீ. சோமசுந்தரசிங் (வயது 57) பாவூர்சத்திரம், அரசு பள்ளியில் ஒவிய ஆசிரியாக பணிபுரிந்து வந்தார்,அவர் திடீர் மாரடைப்பால் 12-07-2026 ஞாயிறு அன்று காலமானார். அவரின் பூத உடல் நல்லடக்கம் சமாதானபுரம் இந்து கல்லறைத் தோட்டத்தில் நடை பெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

‎மறைந்தவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர். அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாருக்கு மூன்றாம் நாள் பால் தெளிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதால்…. அன்னாரின் குடும்பத்தின் சார்பாக உறவுகளும், நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.