தென்காசியில் இலவச மருத்துவ முகாம்

தென்காசியில் இலவச மருத்துவ முகாம்

ஆலங்குளம் ஜூலை 14

தென்காசி மாவட்டம், ஆயக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்,வைத்து தென்காசி, ஜே.சிஐ தமிழ்நாடு விவேகானந்தா சேவை அறக்கட்டளை மற்றும் தென்காசி
அன்னை ஜுவல்லரி, ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

முகாமிற்கு தென்காசி ஜே.சி.ஐ தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், மருத்துவ முகாமை பார்வையிட்டு சிகிச்சை பெற்ற பொதுமக்களிடம் அவர்களின் உடல்நலக் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், தேவையான மருத்துவ சேவைகளை முழுமையாக வழங்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தியதுடன், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

இம்முகாமிற்காக பொருனை மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழு பங்கேற்று மருத்துவ சேவைகளை வழங்கியது. இதில் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் சந்தோஷ், பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சிதம்பர தனு, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் ஏஞ்சலின் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.

முகாமின் பொறுப்பாளராக சரவணன் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்டார்.

இந்நிகழ்வில் ஜே.சிஐ பயிற்சியாளர் கிறிஸ்டோபர், ஜேகாம் சேர்மன் சண்முகசுந்தரம், டி.என் 76 நிறுவனரும் தொழிலதிபருமான பொன் விஜயன், குரோ 7 நிறுவன உரிமையாளர் சுகுமார், ஜே.சிஐ சுப்பிரமணியன், கணேஷ் பாண்டியன், தென்காசிஅன்னை ஜுவல்லரி மேலாளர்
திருநாவுக்கரசு மற்றும் தன்னார்வலர்கள்
ஹரிஹரசுதன், சூர்யா, தங்கச்செல்வி, அன்னலட்சுமி, கற்பக சரவணன், ரமேஷ் ,முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

முகாமில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் சமூகப் பணியை வெகுவாக பாராட்டினார்.

முடிவில், தமிழ்நாடு விவேகானந்தா சேவை அறக்கட்டளையின் நிறுவனரும், “சட்டமும் சமூகமும்” மாத இதழின் ஆசிரியரும், வழக்கறிஞருமான வே. நாகராஜன் நன்றியுரை கூறி முகாமை நிறைவு செய்தார்.