முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம்

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம்
திருச்சி, ஜூன் 23:
தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி ஈபி ரோடு மலைக்கோட்டை பகுதி இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் சுமார் 500 பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளான சவுக்கத் மற்றும் எஸ்.டி. நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாத்திமா, பிரவீன் குமார், சுதா பர்வீன், தாஹிரா, சத்யப்ரியா, புவனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இளைஞரணி சார்பில் ஈபி ரோடு பகுதியைச் சேர்ந்த பீர்முகமது, பரமசிவம், அப்துல் ரகுமான், பிரவீன் குமார், அப்துல் ரஹீம், பாலாஜி, அருண், நிர்மல், நாராயணன் உள்ளிட்ட வட்டக் கழக மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.