கீழ ஆம்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா.
ஆலங்குளம் ஜூன்.15
தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை மற்றும் பசுமை தோழர்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா கீழ ஆம்பர்
பேருந்து நிறுத்தம்
மற்றும் மீனாட்சி நடுநிலைப்பள்ளி வளாகம் ஆகிய
பகுதிகளில்வைத்து நடைபெற்றது
கீழ ஆம்பூர் மீனாட்சி நடுநிலைப்பள்ளி முதல் தாட்டான்பட்டி வரை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு கீழ ஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை தலைவர் பசுமை கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்
ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தார்
விழாவில்
ஆழ்வை பசுமை வேந்தர் மாடசாமி கீழ ஆம்பர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை இராஜசுப்பிரமணி
யன் பாலன், திருமலை குமார். மணிகண்டன் வெங்கடாஜலபதி அந்தோணிராஜ் சம்சுதீன் பட்சிராஜன் ஆனந்த் மூர்த்தி முருகன் மகேந்திரன் கணேசன் வெள்ளத்துரை ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்
முடிவில் பொருளாளர் ராமசாமி பரமசிவன் நன்றி கூறினார்






