தென்காசி, ஜூன். 9 தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வரு கிறது. இதன்காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவ தன் காரணமாக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணி காரணமாக ஏற்கனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இரவில் பெய்த கனமழையி னால் மெயின் அருவியில் வெள் ளப்பெருக்கு ஏற்பட் டது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் பட்டு வருவதன் காரணமாக பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று காலை மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்






