தமிழக விதைப்பந்து திட்டம் மலேசியாவிற்கும் பரவுகிறது
ஆலங்குளம். ஜூன் 8
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வெங்காடம்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விதைப்பந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி 55 லட்சத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை மண்ணில் வீச வைத்துள்ளார்
தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த விதைப்பந்து புரட்சி மலேசிய மண்ணிலும் நடத்திட வேண்டும் என விரும்பி அதைக் கவனிக்க மலேசியா நாட்டைச் சேர்ந்த பூனாட்சி (எ) நாகப்பன். மற்றும் திருமதி செல்வம் (எ) சாந்தி ஆகிய இருவரும் தமிழகம் வந்து மாணவ மாணவியர்கள் விதைப்பந்துகள்
தயாரிப்பதை நேரில் தெரிந்துகொண்டு மலேசியாவிற்கும் இத்திட்டத்தை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக மலேசியர்களின் பயண ஏற்பாடுகளை செய்துவரும் விதைப்பந்துகள் புரட்சியாளர் பூ.திருமாறன் தெரிவித்துள்ளார்
ஏற்பாடுகளை வெங்காடம்பட்டி டிரஸ்ட் இந்தியா பள்ளி முதல்வர் சாந்தி மற்றும் வீகே.புதூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்






