வீரவநல்லூர் வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழகம் இணைந்து நடத்திய பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுபொதுதேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கும்விழா நூலக அரங்கில் வாசகர்வட்டத் தலைவர் . பீ. ஆதம்இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு . S. இசக்கிசரவணன் வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் ரா. பழனி ம. முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவி. க. உலகநாதன் அனைவரையும் வரவேற்றார். பாத்துலிங்கம் பெருமாள், ஜாண்,வீரை. மைதீன் நோட்டரி. சந்தனகுமார் கவின்சிலர் அனந்தராமன்வாழ்த்துரை வழங்கினார்கள் சிறப்பு விருந்தினர்களாக சுழற் கழகச் செயலாளர் (தேர்வு)சு. குமார் சுழற் கழக நிர்வாக செயலாளர் (தேர்வு )சுரேஷ்குமார் “பரணிபாடும் ” ஸ்ரீ கரன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி . மாவட்ட சுழற் கழக உதவி ஆளுநர் எஸ். நவமணி மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ம. ராம்சந்தர் ஊக்க உரையாற்றினார்கள்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சுந்தரம்ஆசிரியர் நினைவாக நூல்கள் பரிசாக சுந்தரம் மகால் திருமதி மணியம்மைகுமார் அவர்கள் வழங்கினார்கள்
நிகழ்ச்சியில் வீரவநல்லூர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த புனிதஜாண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனிதஜாண்ஸ் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19பேருக்கு பாராட்டும் கேடயம் சான்றிதழ் மற்றும் பரிசும் பெற்றனர். வீரவநல்லூர் சியாமளா ஹோம்ஸ் கலா நகர் உரிமையாளர் பரமசிவன் . ஆதம்இல்யாஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது நோட்டரி பப்ளிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் ந. சந்தனகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது ப. திருநீற்றுச்செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் வாசகர்வட்டபொதுசெயலாளர். ரா. சந்திரசேகர் நன்றி கூறினார் முன்னதாக வாசகர் வட்ட நிர்வாகி ஓய்வு பெற்ற ஆசிரியர் இரா நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது






