பிரதமர் மோடி, புருனே சுல்தான் ஹஸ்னல் போல்கியாவுடன் சந்திப்பு..

புது­டெல்லி:
அரசு முறை பயணமாகபிரதமர் நரேந்திர மோடி புருனே, சிங்­கப்பூர் ஆகியநாடுகளுக்கு நேற்று புறப்­பட்டு சென்­றார்.
இதுகுறித்து மத்தியவெளியு­றவு அமைச்­ச­கம்வெளியிட்டுள்ள அறிவிப்­பில், இந்தியா புருனே
நாடுகளுக்கு இடையேநட்பு­றவு ஏற்­பட்­ட­தன்40ஆவதுஆண்டை ஒட்டி,அந்­நாட்டு சுல்­தான் விடுத்த அழைப்பை ஏற்று
பிரதமர் மோடி புருனே
செல்­வ­தாக கூறப்­பட்டுள்ளது. புரு­னேவில் சுல்­தான்ஹாஜி ஹஸ்­னல் போல்கி­யாவை சந்திக்கும் பிரதமர்மோடி, அனைத்து துறைக­ளிலும் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்­ப­டுத்துவது குறித்து ஆலோ­சிக்க உள்­ளார்.
மேலும் பிரதமர் மோடி அந்­நாட்டின் முக்கிய தலை­வர்­களை சந்திக்கி­றார். இந்த சந்திப்பின் போது, இந்தியா – புருனே இடை­யே­யான வரலாற்­றுச் சிறப்புமிக்க உறவை மேம்­ப­டுத்து­வது குறித்து இரு தலை­வர்­க­ளும் விவா­திக்­க­வுள்­ள­னர். இருநாட்­டுத் தலை­வர்­கள் முன்­னி­லை­யில், இந்தியா –புருனே இடையே விண்­வெ­ளித்
துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்­பந்­த­மும்கையெ­ழுத்­தாக உள்­ளது.புருனே நாட்டிற்கு அரசு­முறை பயணமாக செல்­லும் முதல் இந்திய பிரத­மர் மோடி ஆவார்.புருனே பயணத்தை முடித்து விட்டு பிரதமர்மோடி சிங்­கப்பூர் செல்கி­றார்.
சிங்­கப்பூரில் 2 நாட்­கள் அந்­நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலை­வர்­களை சந்­தித்து பேசுகி­றார். இந்த சந்திப்பின்  போதுசிங்­கப்பூரின் முக்கிய
அமைச்­சர்­களும் கலந்து­
கொள்­வர் என்று தெரிவிக்­கப்­பட்டுள்­ளது.மேலும், சிங்­கப்பூரில் தொழில் மற்றும் வணிகத்தலை­வர்­க­ளை­யும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகி­றார்.பிரதமர் வெளியிட்ட
அறிக்­கை­யில் புருனேதாருஸ்­ஸலாமுக்கு முதன் முறையாக இருதரப்பு பய­ணத்தை
மேற்­கொள்­கி­றேன். நமதுராஜதந்திர உற­வுகளின் 40 ஆண்­டுக­ளைக்கொண்­டா­டும்
வேளை­யில்,நமது வரலாற்றுச் சிறப்பு­ மிக்க உறவை புதிய உயரங்களுக்கு முன்­னெ­டுத்துச்
செல்­வ­தற்­காக மதிப்பிற்கு­ரிய சுல்­தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அரச குடும்­பத்தின் பிற மதிப்புமிக்க உறுப்பி­னர்­களு­ட­னான எனது சந்திப்பு­களை நான் ஆவ­லு­டன் எதிர்­நோக்குகி­றேன்.
புரு­னேயிலிருந்து செப்­டம்­பர் 4ஆம் தேதி சிங்­கப்­பூர் செல்கி­றேன். அதிபர் தர்­மன் சண்­முகரத்தி­னம்,பிரதமர் லாரன்ஸ் வோங்,மூத்த அமைச்­சர் லீசியன்லூங் மற்றும் ஓய்வு­பெற்ற மூத்த அமைச்­சர் கோசோக்டோங் ஆகி­யோ­ரைச் சந்­திக்கும் வாய்ப்பை நான்
எதிர் நோக்கியுள்­ளேன்.
சிங்­கப்பூரின் துடிப்­பான வர்த்­தக சமூகத்தின் தலைவர்­க­ளை­யும் நான் சந்திக்கஉள்­ளேன்.
சிங்­கப்பூரு­ட­னான நமது உத்தி­சார் கூட்­டாண்மையை, குறிப்­பாக மேம்­பட்ட உற்­பத்தி, டிஜிட்­டல்­ மயமாக்­கல் மற்றும் நீடித்த
வளர்ச்சி ஆகிய­வற்றின் புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஆழப்­படுத்து ­வ­தற்­கான எனதுவிவாதங்­களை நான் எதிர்­நோக்கியுள்­ளேன்.
நமது கிழக்கு நோக்கிய
கொள்கை மற்றும் இந்­தோ-பசிபிக் தொலை­நோக்­குப் பார்வை ஆகிய­வற்­றில் இரு நாடுகளும் முக்கிய கூட்­டா­ளிக­ளாக உள்­ளன. எனது பயணங்
கள் புருனே, சிங்­கப்பூர் மற்­றும் ஆசியான் மண்­ட­லத்­து­ட­னான நமது ஒத்து­ழைப்பை மேலும் வலுப்­ப­டுத்­தும் என்று நான் நம்புகி­றேன் இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.
நேற்று மாலை புருனே சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. அவரை அந்­நாட்டின் இளவ­ர­சர் ஹாஜி அல்முஹ்­ததீ
பில்லாவர­வேற்று அழைத்­துச் சென்­றார்.
அந்­நாட்டு படையின் அணி­வ­குப்பு மரியா­தையை பிரதமர் ஏற்றுக்­கொண்­டார்.