திருநெல்வேலி, ஏப்.30
தமிழறிஞர் கா.சு.பிள்ளை அவர்களின் 81வது ஆண்டு நினைவு நாள் இன்று (30.04.2026) திருநெல்வேலியில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது நினைவு ஸ்தூபிக்கு, மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் அவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை கழக பேச்சாளர்கள் முத்தையா, சி.பா. முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஹரிபிள்ளை, ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கா.சு.பிள்ளை அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து, நிகழ்ச்சி மரியாதையுடன் நடைபெற்றது






