புதுடெல்லி: ‘‘வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். நீங்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்பீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் அதிகமான இந்திய நிறுவனங்கள் சர்வ தேச பிராண்ட்களாக உருவெடுக்க வேண் டும் என்று விரும்புகிறோ ம் ’ ’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.எக்க னாமிக்ஸ் டைம்ஸ் உலக தலைவர்கள் அமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா மட்டு மல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது: அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னோடியக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்பது எங்கள் வாக்குறுதி, புதுமை படைப்போம் என நீங்கள் உறுதி கொடுங்கள். சீர்திருத்தம் செய்வதே எங்கள் வாக்குறுதி, அவற்றை செயல்படுத்துவோம் என உறுதி கொடுங்கள். நிலையான கொள்கைகளை வழங்குவது எங்கள் வாக்குறுதி,நேர்மறையான செயல்பாடுகளுக்கு நீங்கள் உறுதி கொடுங்கள். அதிக வளர்ச்சியில் கவனம் செலுத்துவது எங்கள் வாக்குறுதி. உயர்தரத்துக்கு நீங்கள் உறுதி கொடுங்கள். பெரிதாக சிந்தியுங்கள். நாம் இணைந்து பல வெற்றிக் கதைகளை எழுதுவோம். மக்களவையில் எங்களுக்கு எண்ணிக்கை குறைந்து விட்டதால், பொருளாதார சீர்திருத்த நடவடிக் கைகளுக்கான லட்சியமும் ஆற்றலும் மங்கி விட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், வாக்காளர்களின் நம்பிக்கை யைப் போலவே, சீர்திருத்தங்ங ்களை தொடரவேண்டும் என்ற எங்கள் தீர்மானம் மிகவும் வலுவாக உள்ளது. எனவே, 21- ம் நூற்றாண்டின் 3-வது தசாப்தம் இந்தியாவுக்கு பொற்கா லமாக அமையும்.இந் தியா வளர்ந்த நாடாக உருவெடுப்பதற்கு 4தூண்கள் அவசியமா கின்றன. மாணவர்களின் கல்வி மற்றும் திறனை அதிகரிப்பது, உலகளாவிய உணவு கூடமாக இந்தியாவை உ ரு வ ா க்கு வ து , பசுமை எரிசக்தியை ஊ க்கு வி ப்ப து , தொழில்நுட்ப உதவி யுடன் முக்கிய சுற் றுலா தலமாக இந்தி யாவை மாற்றுவது ஆகியவைதான் அந்த 4 தூண்கள். உலகம் முழுவதும் ஒவ்வொ ருவருடைய வீட்டிலும் இந்தியாவில் தயா ரிக்கப்பட்ட ஒரு உண வுப் பொருளாவது இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தீர்மானம். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச் சியில் இந்தியா முக் கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தி யப் பொருளாதாரம் 90% வளர்ச்சி அடைந் துள்ளது. இது உலக நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச் சியான 35 சதவீதத் தைவிட 2 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி ஆகும். இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக இடம்பெ றுகிறது. இந்திய பொருளாதாரம், சர்வ தேச அமைப்புகளின் கணிப்புகளை மிஞ்சி அ திகவள ர் ச் சி யை எட்டி வருகிறது. இவ் வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலக சராசரியை விட 2 மடங்குக்கும் அதிகமாக இந்திய பொருளாதாரம் 10 ஆண்டில் 90% வளர்ச்சி பிரதமர் மோடி பெருமிதம்!






