திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதியுலா

திருச்­செந்­தூர்: திருச்­செந்­தூர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயில்ஆவணி
திரு­வி­ழா­வில் நேற்று காலை சுவாமி சண்­மு­கப்­பெ­ரு­மான் வெள்ளை சாத்தி வெள்ளி சப்­ப­ரத்­
தி­லும், பக­லில் பச்சை சாத்தி பச்சை கடை­சல் சப்­ப­ரத்­தி­லும் எழுந்­த­ருளி வீதி­யுலா வந்­த­னர்.திரு­வி­ழா­வின்
சிகர நிகழ்ச்­சி­யான தேரோட்­டம், (2ம் தேதி) நடைபெறு­கி­றது.கடந்த ஆக.24ம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் தொடங்­கிய விழா­வில் நாள்­தோ­றும்
காலை, மாலை­யில் சுவாமி, அம்­மன் தனித்­தனி வாக­னங்­க­ளில்
எழுந்­த­ருளி வீதி­யுலா நடந்து வரு­கி­றது.நேற்று முன்­தி­னம் 7ம் நாளன்று வள்ளி, தெய்­வா­னை­யு­டன் சுவாமி சண்­மு­கர், சிவப்பு சாத்திதங்க சப்­ப­ரத்­தில் முன்­பக்­கம் சிவன்அம்­ச­மா­க­வும்,பின்­பக்­கம் நட­ரா­ஜர் அம்­ச­மா­க­வும் எழுந்­த­ருளி, வீதி­யுலா வந்­த­னர். நேற்றுகாலை7மணிக்கு
பந்­தல்மண்­ட­பம், தையல் நாயகி வகை­யறா மண்­ட­கப்­படி மண்­டபத்­தில் இருந்து பெரிய வெள்ளி சப்­ப­ரத்­தில் வெள்ளை சாத்திபிரம்மா அம்­சத்­தில் சுவாமி எழுந்­தருளி திரு­வீதி வலம் வந்து மேல கோயில் சேர்ந்­தார். தொடர்ந்து பந்­தல்மண்­ட­பம், வைகுண்­டம் சுந்­தர ராம­சுப்­பி­ர­ம­ணியபிள்ளை வகை­யறா மண்­ட­பத்­தில் சுவா­மிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்­கா­ரம்,சிறப்பு தீபா­ரா­தனை நடை­பெற்று, மதி­யம் 12 மணிக்கு பச்சை சாத்தி,பச்­சைக் கடை­சல் சப்­ப­ரத்­தில் எழுந்­த­ருளி வீதி­யுலா வந்து திருக்­கோ­யில் சேர்ந்­தார்.(1ம் தேதி) காலை சுவாமி கும­ர­வி­டங்­கப்­பெ­ரு­மா­னும், சுவாமி அலை­வா­யு ­கந்­தப்­பெ­ரு மா­னும் தனித்­தனி வெள்­ளிக்­கு­தி­ரை­யில் எழுந்­த­ருளி நெல்லை சாலை­யில் உள்ள வேட்­டை வெளி மண்­ட­பத்­தில் திருக்­கண்சாத்தி வீதி­யுலா வந்து மேலக்­கோ­யில் சேர்ந்­த­னர். தொடர்ந்து சுவாமி கும­ர விடங்­கப்­ பெருமான், வள்­ளி­யம்­ம­னும் பக­லில் தனித்­தனி பல்­லக்­கி­லும்,இரவு சுவாமிதங்­கக் கயி­லாய பர்­வத வாக­னத்­தி­லும்,அம்­மன் வெள்­ளிக்­க­மல வாக­னத்­தி­லும் எழுந்­த­ருளி வீதி­யுலா நடக்­கி­றது.
திரு­வி­ழா­வின் சிகரநிகழ்ச்­சி­யான தேரோட்­டம், நாளை(2ம் தேதி) நடைபெ­று­கி­றது. காலை6.30மணிக்கு தேரோட்­டம்
துவங்­கு­கி­றது.