“திருநெல்வேலியில் EVM, VVPAT கருவிகளுக்கான முதற்கட்ட ஒதுக்கீடு நடைபெற்றது”

திருநெல்வேலி, மார்ச் 23:
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வி.வி.பேட் (VVPAT) கருவிகளுக்கான முதற்கட்ட இணையவழி ஒதுக்கீடு (1st Randomization) இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி, பொதுப் பார்வையாளர்கள் மரு. ரிஷிகேஷ் பாஸ்கர் யாதவ், இ.ஆ.ப., திருமதி அனுபா ஸ்ரீவஷ்தவா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவது உறுதி செய்யும் வகையில் இந்த ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேர்தல் பணிகள் சீருடனும், நேர்மையுடனும் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.