திருநெல்வேலி: வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி, மார்ச் 19:
224-திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சித் தலைவரும் முன்னிலையில் இன்று திருநெல்வேலி ஜங்சன் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும், வீடுகளில் பயன்படும் கேஸ் சிலிண்டர்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறையினர், மானூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வாக்களிக்கும் அவசியம் உள்ளிட்ட விடயங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.