நான்குனேரி சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் – நிவாரணம் வழங்கிய நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன்

நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகே பெரும்பத்து பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மற்றும் வழக்கறிஞர் மகாராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

முதலில், பெரும்பத்தில் கொலை செய்யப்பட்ட ஜான்மார்க் அவர்களின் இல்லத்திற்கு சென்ற அவர், குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் நிவாரண உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து, புளியங்குளத்தைச் சேர்ந்த சசிக்குமார் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

மேலும், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீராங்குளத்தைச் சேர்ந்த கணேசன் அவர்களையும் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்து, தேவையான உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன், நேதாஜி சுபாஷ் சேனை தென் மண்டல இளைஞரணி செயலாளர் சுகுனா கணேசன், மாநில பொருளாளர் பாண்டி, மாநகர் மாவட்ட செயலாளர் பால்துரை, சிவன் பாண்டி, வழக்கறிஞரணி உறுப்பினர்கள் வக்கீல் கணேசன், வக்கீல் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலாக இருந்தது.