மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

வள்ளியூரில் பயங்கரம்: குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் – தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணவன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து அந்த நபரைச் சூழ்ந்து பிடித்தனர். ஆத்திரமடைந்த மக்கள் அவருக்குத் தர்ம அடி கொடுத்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட நபரை வள்ளியூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.