வீரவநல்லூரில் புதிய மின்மாற்றி துவக்கம் – பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம்

வீரவநல்லூரில் புதிய மின்மாற்றி துவக்கம் – பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம்
வீரவநல்லூர்:
வீரவநல்லூரில் பசும்பொன் வடக்கு மற்றும் தெற்கு தெரு பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலவி வந்த மின் குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் அளித்த கோரிக்கையை தொடர்ந்து புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 கே.வி. திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதனை கல்லிடைக்குறிச்சி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சாந்தி திறந்து வைத்து இயக்கி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர்கள் வள்ளி மற்றும் பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டு மின்மாற்றி இயக்கத்தை தொடங்கினர். மேலும் நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்தனம்,கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் முத்துராமலிங்கம், மின்வாரிய ஆய்வாளர் வெங்கடேஷ், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பசும்பொன் தெரு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் நிலவி வந்த மின் அழுத்த குறைபாடு நீங்கி, பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.