மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேர் பவுண்டேஷன் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது

சிதம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் கேர்பவுண்டேஷன் சார்பில் அதன் தலைவர் கோபிநாத் அவர்கள் தலைமையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்த தான முகாமில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை ஆராய்ச்சி மாணவர் அஜித் குமார் மற்றும் உள்ளிட்ட தன்னார்வலர்கள் தானாக முன்வந்து ரத்த தானம் வழங்கினார்கள் ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு பழச்சாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

 

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் சுடரொளி திமுக மாணவர் அணி அமைப்பாளர் திவ்யா
சாமி யப்பான் நிர்வாகிகள் கௌதமன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யாதேவி சுரேஷ் ரத்த வங்கி மேற்பார்வையாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

சிதம்பரம் செய்தியாளர்.
வீ. இளமாறன்.