சேரன்மகாதேவி,
27.02.2026.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 26 2 2026 சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
மேலும் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சாலையில்ரூ.132.06 கோடி மதிப்பில் சேரன்மகாதேவி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலதை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சப் கலெக்டர் ஆய்ஷ் குப்தா குத்து விளக்கு ஏற்றினார்,கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், கோட்ட பொறியாளர் ராஜசேகர், உதவி கோட்ட பொறியாளர் சண்முகநாதன், திருமதி.உமாதேவி, உதவி பொறியாளர்
ராஜேந்திரன் சாலை பாதுகாப்பு வல்லுநர் பூசன்குமார்,சேரை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, சேரை பேரூர் செயலாளர் மனிஷா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அபுபக்கர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட நெசவாளர் அணி அன்வர் உசேன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சேரன்மகாதேவி ரயில்வே மேம்பாலத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.






