நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே நிரந்தர ரவுண்டானா சிக்னல் இன்றி கடந்து செல்லலாம்.

நெல்லை சந்­திப்பு அண்ணா சிலை அருகே நிரந்­த­ரமாக ரவுண்­டானா அமைக்­கப்­பட்­டது. இதனால் இப்­ப­குதியை சிக்­னல் இன்றி நிதா­ன­மாக கடந்து செல்­ல­லாம். நெல்லை மாந­கரில் அனைத்து சாலை­களி­லும் போக்குவரத்து நெரி­சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி­றது. இதை குறைப்­ப­தற்­காக சாலை விரிவாக்க பணி, ஒருவழிப்­பாதை, சிக்­னல் இன்றி கடந்து செல்­வது போன்ற மாற்­றங்­களை மாவட்ட நிர்­வா­கம் ஆலோ­சனை உடன், மாந­கராட்சி, நெடுஞ்­சா­லைத்­துறை இணைந்து செயல்­ப­டுத்தி வருகி­றது. நெல்லை சந்­திப்பு அண்ணாசிலை அருகே இரண்டு அடுக்கு மேம்­ பா­லம், சந்­திப்பு பஸ் நிலைய சாலை, திருவ­னந்­த­புரம் சாலை சந்­திக்­கும் பகுதியாக உள்­ளது. இதனால் இங்கு போக்கு­ வரத்து நெரி­சல் தீராத பிரச்­னை­யாக இருந்து வந்­தது. ஏற்­க­னவே பல ஆண்டுகளுக்கு முன்­னர் இங்­குள்ள அண்ணாசிலையை சுற்றி பஸ்­கள் மேம்­பா­லத்­தில் ஏறிச்சென்­றன. அந்த நடை மு­றையை மீண்டும் கொண்டு வருவதற்­காக பரிச்­சார்ந்த வாகன இயக்­கம் முறை செயல்­பாட்­டுக்கு கொண்டுவரப்­பட்­டது. கடந்த சுமார் 3 மாதங்­களாக அண்ணா சிலையை சுற்றி தற்­கா­லிகமாக தடுப்­புகள் வைத்து சிக்­னல் இன்றி வாகனங்­கள் மெதுவாக கடந்து செல்ல ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இதை போலீ­சார், நெடுஞ்­சாலை துறை­யி­னர் கண்­கா­ணித்து வந்­தனர். இந்த முயற்சி ஓர­ளவு கை கொடுத்­தது.இதை­யடுத்து அங்கு நிரந்­த­ரமாக அண்ணா சிலையை சுற்றி ரவுண்­டானா அமைக்கும் பணி நடை­ பெ­றுகி­றது. இத­னால் இந்­தப் பகுதியை வாகனங்­கள் சிக்­னல் இன்றி தங்­க­ளது திசை நோக்கிஎளிதாக கடந்து செல்ல முடியும். இங்கு போலீ­சா­ரும் தொடர்ந்து கண்­கா­ணிப்­பில் இருப்பார்­கள். காலை மற்­றும் மாலை நேரங்­க­ளில் மட்டும் கூடுதல் வாகன போக்குவரத்து இருப்­பதால் போக்குவரத்து போலீ­சார் கண்­காணித்து வாகனங்­கள் கடந்து செல்ல உதவு­வார்­கள். இந்­தப் பகுதி ரவுண்­டானா போல் பாளை பஸ் நிலை­யம் அருகே பெரி­யார் சிலை பகுதியிலும் புதிய பஸ் நிலை­யம் அருகே நாகர்­கோ­வில் ரோடு, தெற்கு பைபாஸ் சாலை சந்­திப்பு பகுதியிலும் ரவுண்­டானா அமைக்க நட­வடிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வருகின்­றன.