சேரன்மாதேவி
சேரன்மாதேவி ஏ.கே.பி. ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி “Sports FIESTA 2025–26” வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் முதன்மை விருந்தினராக முன்னாள் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கலந்து கொண்டு, மாணவர்களை வாழ்த்திப் பேசினார். விளையாட்டிலும் வாழ்க்கையிலும் ஒழுக்கம், மனவலிமை மற்றும் தொடர்ச்சியான முயற்சி வெற்றிக்கு அடிப்படை எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெல்லை முபாரக், கல்வி மற்றும் விளையாட்டு இரண்டையும் சமநிலையில் கொண்டு சென்றாலே முழுமையான மனித வளர்ச்சி சாத்தியமாகும் எனக் கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைவர் முகமது காசிம், விளையாட்டுகள் மாணவர்களின் ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் முக்கிய கருவியாகும் என தெரிவித்தார்.
இயக்குநர் செய்யது கலந்தர் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகத் தலைவர் ஜி.பி. அய்யர், பள்ளி முதல்வர் மீனா, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய அம்சங்களாக மாணவர்களின் அணிவகுப்பு, உடற்பயிற்சி காட்சிகள், தடகள போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஏ.கே.பி. ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி “Sports FIESTA 2025–26”






