ஜன் தன் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பயனாளிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புது­டெல்லி:ஜன் தன் திட்­டம் தொடங்­கப்­பட்டு 10 ஆண்­டு­கள் நிறைவு பெற்­றதையடுத்து, இத்திட்­டத்தின்பயனாளி கள் மற்­றும் இதை வெற்­றி­ பெ­றச் செய்­த­வர்­களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்­ளார். பிரதமராக நரேந்திரமோடி­பொறுப்­பேற்ற  பிறகு,  குறைந்­த­ பட்ட­சம் குடும்­பத்துக்கு ஒரு வங்கிக் கணக்குதொடங்­கும் திட்­டம் (பிரதமரின் ஜன்தன் யோஜனா) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி அறிமு­கம் செய்­யப் பட்­டது. இதில் குறைந்­த ­பட்ச இருப்பு வைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.இதன் மூ­லம் கடன், காப்பீடு உள்ளிட்ட வச­தி­க­ளையும் பயனா­ளி­கள் பெறமுடியும். இந்த திட்­டம் தொடங்­கப்­பட்டு நேற்­றுடன் 10 ஆண்டு­கள் நிறை­வ­டைந்­தது.    இதை யொட்டி பிரதமர் மோடிதனது எக்ஸ் சமூக வலை­த­ளத்தில் கூறியிருப்­பதாவது:இன்று (நேற்று) நாம் ஒரு­ம­கத்­தான தினத்தை கொண்­டா­டுகி­றோம். அதுதான் ஜன் தன் திட்­டத்­தின் 10 ஆண்டு நிறைவு.பயனா­ளி­க­ளுக்கும் இந்த திட்­டம் வெற்றி­ ­பெற பாடுபட்ட அனை­வருக்கும்  ­வாழ்த்து­கள். அனை­வ­ரையும் உள்­ள­டக்கிய நிதிசேவையை ஊக்குவிக்­க­வும் கோடிக்­கணக்­கான மக்­களுக்கு, குறிப்­பாக பெண்­கள், இளை­ஞர்­கள் மற்­றும் விளிம்பு நிலை சமுதா­யத்தினருக்கு கண்­ணியம் அளிப்­பதிலும் ஜன்தன் திட்­டம் முக்கிய பங்காற்­றியது. மேலும் இந்த திட்­டம் அதி­கா­ரம் மற்­றும் வாய்ப்பு வழங்­கு­வதை நோக்­கமா­கக் கொண்­டது.இவ்­வாறு அவர் தெரி­வித்துள்­ளார்.கடந்த 10 ஆண்டு­க­ளில், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய நிதி சேவை­யின் கீழ் சும ார் 80% பெண்­களை கொண்டு­ வர ஜன் தன் திட்டம் மிகப்­பெ­ரிய பங்காற்றி உள்­ளது. குறிப­பாக கடந்த  2011ல் வெறும் 26% பெண்­களுக்கு மட்டுமே வங்­கிக் கணக்கு இருந்­தது.  இது 2021 ல் 78%  ஆக அதி­க­ரித்­தது. ஜன்தன் திட்­டத்தின் கீழ் இது­வரை 53.13 கோடி வங்கிக்கணக் கு­கள் தடங்­கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் பெயரில் உள்ள கணக்­கு­கள் எண்ணிக்கை 30 கோடிக்கும் அதி­கம். ஜன்தன் கணக்கு வைத்திருப்போ­ரில் 35 கோடிக்கும் அதி­க­மா­னோர் ஊர­கம் மற்றும் சிறு நக­ரங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர்.இப்­போது நகர்ப்­புற மக்­க­ளுக்கு இணைய ாக (95%) கிரா­மப்­புற ம­ககளிட­மும (96%) வங்­கிக் கணக்கு­கள் உள்­ளன. ஜன் தன் திட்­ட பயன­ளி­க­ளில் இது­வரை 36.13கோடி பேருக்குஎவ்­வித கட்­டணமும் இல்­லாமல் ரூபே டெபிட்கார்டு வழங்கள்­ளப்பட்­டுள்­ளது. இந்­த கார்டு வைத்திருப்­போருக்கு ரூ.2 லட்­சம் வரை ஆயுள் காப்­பீடு மற்­றும் ரூ.10 ஆயிரம் வரை ஓவர்டிராப்ட் வசதி வழங்­கப்பட்­டுள்­ளதுன.மேலும் ஜன் தன் திட்டம் பல்­வேறு மக்­கள் ­நல திட்­டங்­களை செயல்­படுத்­துவ­தற்கும்  அடித்தளமாக உள்­ளது. குறிபபாக கரோனா பெருந்­தொற்று கால நிதியுதவி, விவ­சாயி­க­ளுக்­கான பிஎம் கிசான் திட்ட நிதியுதவி,மகாத்மா காந்தி ஊரக வேலை  உறுதி திடடம் ஊதி­யம் ஆகியவை பயனா­ளி­களின் வங்­கிக் கணக்கில் நேரடியாக  சலுத்­தப்­படுகிறது. இது தவிர ஆயுள் மற்­றும் மருத்துவ காப்பீடு திட்­டங்­களை  ெசயல்­படுத்­தவும் இது உதவுகி­றது.ஜன் தன் வங்­கிக் கணக்கு­க­ளில் ரூ.2.31 லட்­சம்கோடி இருப்பு உள்­ளது.இந்­தக்கணக்கு­க­ளில்அதிக அள­வில் இருப்பு இருக்கும் மாநி­லங்­களில் மது, புகைப் பழக்­கம் மற்றும்  குற ்­ற செயல்­கள் கணிசம க குறைந்திருப்­பதாக கடந்த 2021 எஸ்பிஐ வெளியிட்ட ஒரு ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்டுள்­ளது.அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய நிதி சேவையில் சீனவையே இந்தியா மிஞ்சி­விட்­டதா­க­வும் அதில் கூறப்­பள்ளது 2011  ல் இந்திய மக­களில் 35% பேர் மட்மே வங்கிக்கணக்கு வைத்திருந்­தனர்.இது  2021ல்  78 சதவீ­தமாக அதி­க­ரித்துள்­ளது. உலக நாடு­கள் பாராட்டு:அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய நிதி சேவை வழங்­கு­வதில் ஜன் தன் திட்­டம் மிகப்பெ­ரிய மாற்­றத்தைஏற்­படுத்தி உள்­ள­தாக லக ந டு­கள் பாராட்டி உள்­ளன.கடந்த  ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட ஜி20 அறிக்­கை­யில், அனைவ­ரை­யும் உள்­ள­டக்கிய நிதி சேவை இலக்கை வெறும் 6 ஆண்க­ளில் இந்  தியா எட்­டிவிட்­டடு­தாக கூறப்­பட்­டுள்­ளது. டிஜிட்டல் கட்­ட­மைப்பு இல்­லாமல் இருந்திருந்­தால் இந்த இலக்கை எடட  47 ஆண்­டுகள் ஆகி இருக்கும் என அதில் கூறப்­பட்­டுள்ளது.