“மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் புரட்டி போட்ட முடிவுகள்!”

“மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் புரட்டி போட்ட முடிவுகள்!”
* சிரிய கட்சிகள்”ஆதிக்கம் செலுத்தி ஆட்சி பீடத்தில் ஏறும் அதிசிய நிலை!”
* தமிழர்கள் அல்லாத மும்பை மாநகராட்சி!
*நாசிக் மாநகராட்சியில் ஒரு தமிழர்!
–மராட்டிய உள்ளாட்சி தேர்தல் ஒரு கண்ணோட்டம்..!
×××××××××××××××××××××
மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தல் 15.01.2026 அன்று நடைபெற்றது. மறுநாள் 16.01.2026, அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் என்பது, மத்தியில் பி. ஜே.பி, ஆட்சி வந்த பிறகு நடைபெறும் ஆளுமை, அரசியல், அதிகாரம் என்ற பல்வேறு கோனங்களை உள்ளடக்கிய அதிசைய தீர்ப்பாக அமைந்த முடிவுகள் மராட்டிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
மும்முனை போட்டி நிகழ்ந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் 25 ஆண்டுகால “தாக்கரே”ஆதிக்கம் தகர்க்கபட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளில் பா. ஜனதா வெற்றி பெற்றுள்ளது.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் மட்டும் 7 வார்டுகள் அமைந்துள்ளது. இவற்றில்2 இடங்களை காங்கிரஸ்&உத்தவ் சிவசேனா வெற்றி மட்டுமே நியாயமான முடிவு என்று பொதுமக்கள் கருத்துக்களை கூறினர்.பிற இடங்களில் ஆளும் பிஜேபி யின் அதிகார துஷ்பிரியோகம் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டுவது தெளிவாக கேட்கமுடிகிறது.
புனே மாநகராட்சி தேர்தலில்”கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பெண் கைதிகள் 2 பேர் தேர்தலில் வெற்றி வாகை சூடி இருப்பது குறிப்பிடதக்கது.
“ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது”என்று ராகுல்காந்தி கூறும் கருத்து உண்மை என்பதை நிருபித்து விட்டதாகவே பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
“மாலேகாவ்”மாநகராட்சியினை பொருத்தமட்டில் ஆசிப் சேக்கின்”இஸ்லாம்”கட்சி35இடங்களை கைபற்றி மேயர் பதவியினை தக்கவைத்துள்ளது குறிப்பிடதக்கது.
நாக்பூர் மாநகராட்சியினை பிஜேபி மீண்டும் தக்கவைத்து கொண்டு, காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும்,நாசிக் மாநகராட்சி தேர்தலில் ஒரே ஒரு தமிழர் கைலாஷ் சுரேஷ் என்பவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இவரின் சொந்த திருவண்ணாமலை என்பது குறிப்பிடதக்கது.
எது எப்படியோ… ஆண்டுகளும், காட்சிகளும் மாறினாலும், ஜனநாயக நம்பிக்கை என்பது நிச்சயம் ஓர் நாள் வெல்லும் என்பது மட்டும் உறுதி.
–செய்திகளுக்காக மும்பையில் இருந்து, உதவி ஆசிரியர் பெ. எலியாஸ்,”தமிழன் உதயம்”