சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

04.01.2026.

சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு தினம்

சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகராக இருந்தவர் பி.எச் பாண்டியன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது 6-ம் ஆண்டு நினைவு தினம் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தபேரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தமிழக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் இரா. ஆவுடையப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ ஆகியோர் பி.எச் பாண்டியன் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து திரளான தி.மு.க நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தனர். இதில் தி.மு.க நிர்வாகிகள் ஆர்.எஸ் முருகன், டென்சிங் சுவாமி தாஸ், விருதுநகர் கதிரவன், வக்கீல் ஜெயக்குமார், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு முத்துப்பாண்டி என்ற பிரபு, மேற்கு முத்துகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட், மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்துக்குமார், முன்னாள் ஆவின் துணை சேர்மன் கணபதி மற்றும் திரளான தி.மு.க நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோவிந்தேரியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இல்லத்தில் வைத்து, நெல்லை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க மற்றும் அதிமுக உரிமை மீட்பு கழகத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் இரா. ஆவுடையப்பன், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர்.