வீரவநல்லூர் சிறுமின்விசை குடிநீர் தொட்டி திறப்பு.
வீரவநல்லூர்
27.12.2025.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமின்விசை குடிநீர் தொட்டியை திறந்தார்.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ். உடன், பேரூராட்சித் தலைவி சித்ராசுப்பிரமணியன் உள்ளிட்டோர்.
சேரன்மகாதேவி, டிச.27. திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பேரூராட்சியில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வீரவநல்லூர் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தைக்கால் தெரு, கடையம்மன் கோயில், வடக்குத் ரதவீதி ஆகிய மூன்று இடங்களில் தலா ரூ.2.70 லட்சம் மதிப்பில் சிறுமின்விசை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு திருநெல்வேலி மக்களவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிநீர் தொட்டியை மக்களவை உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ் திறந்தார். பேரூராட்சித் தலைவி சு. சித்ரா சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் வசந்தசந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ராம்சிங், பேரூராட்சி உறுப்பினர்கள் முத்துக்குமார், சந்திரா, தெய்வ நாயகம், சிதம்பரம், தாமரைசெல்வி, அப்துல்ரகுமான், வெங்கடேஸ்வரி, சந்தனம், கங்கா ராஜேஸ்வரி, ஆறுமுகம், சண்முகவேல், கல்பனா, சின்னத்துரை, ஒன்றிய திமுக அவைத் தலைவர் இரா. பழனி, நகர திமுக செயலர் சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.






