ஈரோடு விஜய் பிரசார கூட்டத்திற்கு திரண்ட தொண்டர்கள் : முதல் வரிசையில் இடம் பிடிக்க மும்முரம்
ஈரோடு : ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்க , தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர் . முதல் வரிசையில் இடம்பிடிக்க தொண்டர்கள் முண்டியடித்து வருகின்றனர்
கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக , ஈரோட்டில் இன்று ( டிச . , பதினெட்டு ) தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்துகிறார் . இதற்காக இன்று காலை ஒன்பது மணி முப்பது நிமிடங்கள் மணிக்கு , விஜய் கோவை வருகிறார் . சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர் , அங்கு அரை மணி நேரம் கட்சியினரை சந்திக்க உள்ளார் . அங்கு , முன்னாள் அ . தி . மு . க , எம் . எல் . ஏ , ஒருவர் தலைமையில் , த . வெ . க , வில் பலரும் , இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த நிகழ்ச்சிக்கு பின் , விஜய் , காலை பதினொன்று மணி முப்பது நிமிடங்கள் மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு புறப்படுகிறார் . விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே , சரளை கிராமத்தில் , ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார் . காலை எட்டு மணி முதல் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில் முன்பாகவே அனுமதிக்கப்பட்டனர்
கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தவெக தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர் . முதல் வரிசையில் இடம்பிடிக்க முண்டியடிக்கும் தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி கட்டுப் படுத்தினர். தேசிய நெ டுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக தொண்டர்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .






