டிசம்பர் : 14 எஸ்டிபிஐ கட்சி மகளிரணி நெல்லை மாநகர் மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் 

டிசம்பர் : 14 எஸ்டிபிஐ கட்சி மகளிரணி நெல்லை மாநகர் மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டம் தாழையூத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் SDPI கட்சி மகளிர் அணி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் மகளிர் அணி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ராபியா தலைமையில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தாழையூத்து மகளிர் அணி கிளை தலைவர்
ஜமில் மீராள் வரவேற்புரை ஆற்றினார் எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான் மாவட்ட பொதுச் செயலாளர் அன்வர்ஷா . நெல்லை சட்டமன்ற தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில் செயலாளர் பயாஸ் மகளிர் அணியின் நிர்வாகிகள். முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக விமன் இந்தியா மூவ்மெண்ட் SDPI கட்சி மகளிரணி மாநில துணை தலைவர்
ஜமீலுன் நிஷா , மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத், ஆகியோர் கலந்து கொண்டு பூத்கமிட்டி வேலைகள் குறித்து விவாதித்தனர். பாளை, நெல்லை சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட BLA 2 மகளிரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை, பாளை தொகுதிகளில் நமக்கான பூத் நமக்கான ஒட்டு என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் டிசம்பர் 27 மதுரையில் நடைபெற இருக்கும் SDPI கட்சியின் மகளிர் அணி BL 2 மாநாட்டில் கலந்து கொள்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இறுதியாக கதீஜத்துல் நூரியா நன்றி கூறினார் நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மகளிர் அணி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்