புதுச்சேரி : வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த ராஜா ( எ ) வள்ளியப்பன் போலி மருந்து தயாரித்து பல கோடிக்கு அதிபதியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி உள்ளது
புதுச்சேரியில் பெரும் புயலை கிளப்பியுள்ள போலி மருந்து விவகாரத்தில் முன்ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்த ராஜா ( எ ) வள்ளியப்பன் , நாற்பத்து இரண்டு ; விவேக் ஆகியோர் கடந்த பத்து ஆம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தனர் . அவர்களை எஸ் . பி . , நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்
சிவகங்கை மாவட்டம் , திருப்பத்துார் அடுத்த கருங்குழி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வள்ளியப்பன் . பத்து ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த இவர் , வேலை தேடி கடந்த இரண்டாயிரம் ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தவர் , மருந்து கடையில் வேலை செய்தார் . பின் , கடலுாரில் ஏஜென்சி எடுத்து , மருந்து மொத்த வியாபாரம் செய்து வந்தார் . அப்போது , கடலுார் தங்கராஜ் நகரில் தங்கியிருந்த மருந்து விற்பனை பிரதிநிதியான சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அடுத்த கழனிவாசலை சேர்ந்த முருகேசன் , முப்பத்து ஒன்று ; என்பவர் அறிமுகமானார் . அவர் , அளித்த திட்டத்தின்படி வள்ளியப்பன் , கடந்த இரண்டாயிரத்து பத்து ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை குரோம்பேட்டையில் விலை குறைந்த ‘ அல்டெக்ஸ்’ இருமல் மருந்தை வாங்கி , அதனை புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் வைத்து லேபிளை கிழித்துவிட்டு , விலை அதிகமுள்ள போலியாக அச்சடித்து வைத்திருந்த ‘ பெனட்ரில் சிரப்’ லேபிளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தார் . இது குறித்த புகாரின் பேரில் , கடந்த இரண்டாயிரத்து பத்து ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து , வள்ளியப்பன் உள்ளிட்ட மூவரை கைது செய்து கடலுார் சிறையில் அடைத்தனர் . அவ்வழக்கில் ஆறு மாதம் கழித்து ஜாமினில் வந்த வள்ளியப்பன் , அடுத்த சில மாதங்களில் தனது பெயரை ராஜா என மாற்றிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் ‘ யாசித் பார்மசி’ பெயரில் கம்பெனி துவங்கி மருந்து தயாரித்து வந்தார் . பின் , இரண்டாயிரத்து இருபது ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் அபிேஷகப்பாக்கத்தில் “ நியூ ஜெர்ஜி”பெயரில் கம்பெனி துவங்கி மருந்து தயாரித்து விற்பனை செய்து வந்தார் . அதில் , போலி மருந்து தயாரித்ததாக ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து அபிேஷகப்பாக்கம் கம்பெனியை கடந்த இரண்டாயிரத்து இருபத்து மூன்று ஆம் ஆண்டு ‘ சீல்’ வைத்தனர்
அதன்பிறகு , இரண்டாயிரத்து இருபத்து நான்கு ஆம் ஆண்டு திருபுவனைபாளையத்தில் மூடிக்கிடந்த லார்வான் கம்பெனியை ரூபாய் நானூற்று ஐம்பது கோடிக்கு விலைக்கு வாங்கி , பிரபல நிறுவனங்களின் அதிகம் விற்பனையாகும் மற்றும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து , அதனை புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள தனது ஸ்ரீ சன்பார்மா ஏஜென்சி மூலம் , இல்லாத குடோன்களுக்கு அமன் பார்மா மற்றும் மீனாட்சி பார்மா என உரிமம் பெற்று , வட மாநிலங்களுக்கு விற்பனை செய்து , பல கோடி ரூபாய் சம்பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது . அதன் மூலம் புதுச்சேரி , மதுரை , கடலுார் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலம் உள்ளிட்ட பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் , பதினாறு வால்வோ பஸ்கள் வாங்கி தமிழகம் முழுதும் இயக்கி வருவதும் , மேலும் , இவர் தனது தொழிலை விரிவுப்படுத்த அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதும் , சமீபத்தில் தனியார் வங்கியில் ரூபாய் நாற்பது கோடி கடன் பெற்றிருப்பதும் , பல்வேறு மருந்து நிறுவனங்களில் மூலப் பொருட்கள் வாங்கி , அந்த நிறுவனம் பெயரிலேயே மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் , மூலப் பொருட்கள் வாங்கியதற்கு பல கோடி ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது
இந்நிலையில் , வள்ளியப்பன் போலி மருந்து தயாரிக்க உதவிய புதுச்சேரி மற்றும் கடலுாரை சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தனர் . இந்நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள லுாபின் மருந்து நிறுவனம் அளித்த போலி மருந்து புகாரின் பேரில் , மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து , ராஜா ( எ ) வள்ளியப்பனையும் , அமன் மற்றும் மீனாட்சி பார்மா குடோன்களின் உரிமையாளரான விவேக் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
போலி மருந்து வழக்கில் , இதுவரை ராஜா ( எ ) வள்ளியப்பன் , விவேக் உள்ளிட்ட பதினொன்று பேரை கைது செய்துள்ளனர் . மேலும் , ஏஜென்சி உரிமையாளரான வள்ளியப்பனின் மனைவி ஞானப்பிரியா , குடோன் உரிமையாளர்கள், மூலப் பொருட்கள் கொடுத்தவர்கள் , மருந்துகளை விற்பனை செய்தோர் என நுாற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்
பலத்த சந்தேகம் ஆட் சின்னம் ஆட் சின்னம் தொழில் நிறுவனம் துவங்க தொழில் துறை , மின் துறை , உள்ளாட்சி துறை , சுற்றுச் சூழல் துறை , தீயணைப்பு , தொழிலாளர் துறை என பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டியுள்ளது . எளிதாக கிடைத்து விடாது . வள்ளியப்பனுக்கு , அனைத்து அனுமதியும் உடனே கிடைக்க யார்யார் உடந்தை என்பது முக்கிய கேள்வியாக உள்ளது .
Advertisement






