சேரன்மகாதேவியில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஆர்டிஓவிடம் மனு.

உருக்குலைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி

சேரன்மகாதேவியில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஆர்டிஓவிடம் மனு.

சேரன்மகாதேவி டிசம்பர் 9,

சேரன்மகாதேவியில் உருகுலைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்டிஓவிடம் மன அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றில் இருந்து களக்காடு நகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு கூட்டி குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சேரன்மகாதேவி ஊருக்குள் நடந்து வரும் இப்பணியானது ஆமை வேகத்திலும் பாதுகாப்பற்ற முறையிலும் நடந்து வருவதால் தினமும் வாகன விபத்து ஏற்படுகிறது.

இதனை கண்டித்தும் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி சேரன்மகாதேவியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் காந்தி பார்க் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் அரசின் கவனத்திற்கு ஈர்க்கும் வகையில் நாற்று நடவு செய்து போராட்டம் நடத்தினர், இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதை கண்டித்தும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் சேரன்மகாதேவி வியாபாரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு விவரம்: பாதுகாப்பற்ற முறையில் பணிகளை மேற்கொண்டு விபத்து மற்றும் உயிர்ப்பலி ஏற்பட காரணமாக இருந்த ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பணியினை விரைந்து முடித்திட கோரி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய வியாபாரி சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்ய பரிந்துரை செய்து சாலை பணியை விரைந்து முடித்திட வேண்டும் இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.