கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் கணினிவெளிச் சட்டக்குற்றவாளி ஆவார்.
திருநெல்வேலி
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த அஷ்ரப் மகன் ஆசிக் (வயது 27) என்பவர் கணினிவெளிச் சட்டக்குற்றவாளி ஆவார்.இவர் திருநெல்வேலி மாநகரில், ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து போலியானவங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையை தூண்டி, ஆன்லைன் மோசடி செய்து பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றும்செயலில் ஈடுபடுவதன் மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
இதனையடுத்து திருநெல்வேலி மாநகர துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) செந்தாமரைக்கண்ணன்,சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ்கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி ஆசிக்நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.






