பழநி: “ஆன்மிக வர லாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக
முத்தமிழ் முருகன் மாநாடு (ஆக.24) தொடங்கியது.இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய
முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோயில்களை பார்த்துக் கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டினார். த மி ழ்க்கடவுளன முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு (ஆக.24), (ஆக.25) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை காலை 8.30மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனி யாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத் ப லzதில் இரத்தினகிரி மு ருகனடி மை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை (லகோ பொறிககப்பட்ட ) கொடியை ஏற்றி வைத்தார். காலை 9 மணிக் மகு ாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். வேல் கோட்டத்தை, சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம் எல்ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு . க . ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினர். அப்போது முதல்வர் பேசியதாவது: கோயில் களை பார்த்துக்கொள்ள கூறி அறநிலையத்துறையை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார். அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. பழநி முருகன் கோயிலுக் வரும் பக்தர்களின்
எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் நலனைக்கருத்தில் கொண்டும்,வளர்ச்சி திட்டகளை மேப்பணி ற்கொள்ளவும் பழநியில் 58.77 ஏக்கர் நிலம்ரூ.58 கோடியில் கையகப்படுத்தப்பட உள்ளது. அறுபடை வீடுகளிலும் ரூ.789 கோடியில் 251 பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பழநி முருகன் உட்பட 69 முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப் பட்டு உள்ளது. திராவிட மாடல் என்பது எல்லோ ருக்கும் எல்லாம் என்பது தான். கோயில் சொத்துக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது . அறநிலையத் துறையின் சதன ைகளை புத்தகமாக வெளியிட் டுள்ளோம். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழக வரலாறு மட்டுமின்றி ஆன் மிக வரலாற்றிலேயே அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம் பெறும். இவவாறு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திப்பேசினார். தொடர்ந்து நடந்த விழாவில் அறநிலை யங்கள் துறை அரசு முதன்மை செயலர் பி.சந்திரமோகன் வரவேற்றார். தருமபுர ஆதீமனம் ாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச் சார்யசுவாமிக வண்ணாமலை ஆதீ ள், திருகுன்றக்குடி பொன்னம்னம் பல அடிகளார், மதுரை ஆதீனம்ஹரிஹர தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டை முன்னிட்டு காலை முதலே பதிவு செய்த பங்கேற்பாளர்கள், பக்தர்கள், பொது மக்கள் திரண்டனர். கண்காட்சி அரங்கில் திருமுருகனின் ஓவிய காட்சியரங்கம், 3டி திரையரங்கம் மற்றும் விஆர் (விர்ச்சுவல் ரியலாலிட்டி) அரங்கம் மற்றும் ஆன்மிக நூல்களின் புத்தக் கண்காட்சி இடம் பெற்றிருநதது. மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச் சிகள் நேரடியாகஒளிர ப்பப்படுகி ப ம ன்றன .ம ாநாட்டிற்காக வந் துள்ள பக்தர்கள் டிஜிட் டல் திரையில் மாந ாட்டு நி கழ்வுகளை கண்டு ரசித்த்து வருகின்றன. மாநாட்டில் கலந்து கொள்ளும் அனை ரு வ க்கும் உணவு ஏற்பாடு களு ம் செய்யப்பட்டுள்ளன.






